by Staff Writer 29-03-2020 | 2:54 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க விதிக்கப்பட்ட தடை ஏப்ரல் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையை கவனத்திற்கொண்டு இந்தத் தீர்மானம எடுக்கப்பட்டதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதனிடையே, வௌிநாட்டுப் பயணிகள் 15,000 பேர் தொடர்ந்தும் நாட்டிலுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அவர்களை சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்புவது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமாலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.