ஏப்ரல் தாக்குதல்: சியோன் தேவாலய தற்கொலைத் தாக்குதலுக்கு உதவிய சந்தேகநபர் கைது

ஏப்ரல் தாக்குதல்: சியோன் தேவாலய தற்கொலைத் தாக்குதலுக்கு உதவிய சந்தேகநபர் கைது

ஏப்ரல் தாக்குதல்: சியோன் தேவாலய தற்கொலைத் தாக்குதலுக்கு உதவிய சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2020 | 6:20 pm

Colombo (News 1st) கடந்த வருடம் ஏப்ரல் 21 மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு உதவிய சந்தேகநபர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகநபர் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்ஸையைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரிடம் பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய இருவேறு விடயங்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் 31 சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படுதுடன் மேலும் 60 சந்தேகநபர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்