கொரோனா தாக்கம்: வுஹான் நகரம் பகுதியளவில் திறப்பு

சீனாவின் வுஹான் நகரம் 2 மாதங்களின் பின்னர் பகுதியளவில் திறப்பு

by Staff Writer 28-03-2020 | 5:30 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட சீனாவின் வுஹான் நகர், வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் வரையில் கடந்த 2 மாதங்களாக முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த நகரம் தற்போது பகுதியளவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 6 இலட்சத்தை எட்டியுள்ளது. அத்துடன், வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,000 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தற்போது 199 நாடுகளுக்கும் பரவியுள்ளது.