கண்காணிப்பின் பின்னர் 305 பேர் வௌியேற்றம்

கண்காணிப்பு நடவடிக்கைகளின் பின்னர் 305 பேர் வௌியேற்றம்

by Staff Writer 28-03-2020 | 2:38 PM
Colombo (News 1st) கண்காணிப்பு நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 305 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. வவுனியா - பம்பைமடு கண்காணிப்பு நிலையத்தில் தங்கியிருந்த 167 பேர் இன்று (28) அங்கிருந்து வௌியேறியதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து நாட்டை வந்தடைந்தவர்களே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இதனைத்தவிர, புனானை கண்காணிப்பு நிலையத்தில் தங்கியிருந்த 78 பேரும் கல்கந்த கண்காணிப்பு நிலையத்தில் தங்கியிருந்த 60 பேரும் கண்காணிப்பின் பின்னர் இன்று வீடுகளுக்கு திரும்பியதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்