ஊரடங்கு சட்டத்தை மீறிய 1167 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1167 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1167 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2020 | 2:44 pm

Colombo (News 1st) பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் 1167 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (27) காலை 6 மணி முதல் இன்று (28) காலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த காலப்பகுதிக்குள் 260 வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதி வரை 5185 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதிக்குள் 1293 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்