இத்தாலியில் ஒரேநாளில் 919 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் ஒரேநாளில் 919 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் ஒரேநாளில் 919 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

28 Mar, 2020 | 3:26 pm

Colombo (News 1st) சர்வதேச நாடுகளையே அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸினால் இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனடிப்படையில், இத்தாலியில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,134 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று, நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளான 4,401 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதையடுத்து அங்கு தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 86,498 ஆக உயர்வடைந்துள்ளது.

இத்தாலியில் நேற்று உயிரிழந்த 969 பேரில் 50 வைத்தியர்கள் அடங்குவதுடன் அவர்களில் 32 பேர் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் காணப்படும் Lombardy பிராந்தியத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றியவர்களாவர்.

நேற்று முன்தினம் வரையான தரவுகளின் பிரகாரம், 6,414 சுகாதார பணியாளர்கள், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்