5 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது

5 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது

5 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

27 Mar, 2020 | 3:29 pm

Colombo (News 1st) நாட்டின் 5 மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வட மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும், புத்தளம் மாவட்டத்திற்கும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.

எனினும், யாழ்ப்பாணம் கொழும்பு, கம்பஹா , களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மறு அறுவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய 16 மாவட்டங்களிலும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்