போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று

ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று

by Bella Dalima 27-03-2020 | 5:24 PM
Colombo (News 1st) ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இலேசான அறிகுறிகள் தென்பட்டதால், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். எவ்வாறாயினும், கொரோனா தொற்றுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் தாம் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் இணைந்துகொள்வதாக போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அனைவரும் இணைந்து இந்த தொற்றை இல்லாதொழிக்க போராடுவோம் எனவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். இறுதியாக அவர் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் 11,600-இற்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதுவரை 578 பேர் உயிரிழந்துள்ளனர்.