by Staff Writer 27-03-2020 | 5:07 PM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் மரணங்கள் சம்பவித்தால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிக்கையொன்றின் மூலம் தௌிவுபடுத்தியுள்ளது.
உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அதிகமானோர் ஒன்று கூட முடியாமையினால் வீடுகளில் இருந்தே துஆ செய்யுமாறும் உலமா சபை குறிப்பிட்டுள்ளது.
ஜனாஸா தொழுகைக்கு பொலிஸாரால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான மக்களை மாத்திரம் அழைத்துச்செல்ல வேண்டும் எனவும் ஜனாஸாவில் உறவினர்கள் ஒன்று சேரும் போது சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக்கொண்டுள்ளது.
தொழுகையின் போது தகுந்த காரணத்திற்காக இடைவௌி விடுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளமையினால், ஒருவர் மற்றவரில் இருந்து தள்ளி நிற்குமாறும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.