இந்தியாவில் கொரோனா தொற்றால் 17 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: 17 பேர் உயிரிழப்பு

by Bella Dalima 27-03-2020 | 4:35 PM
Colombo (News 1st) இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் இதுவரை 64 பேர் முழுமையாக குணமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 35 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 6 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த காலப்பகுதியில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்காக 23 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய நிதியமைச்சர் நேற்று (26) அறிவித்ததுடன், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய மத்திய வங்கி முன்னெடுத்துள்ளது. இதனிடையே, அமெரிக்க செனட்டர்களுக்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் சட்டமூலமொன்றைக் கொண்டு வருவது தொடர்பில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.