மக்கள் முறைப்பாடுகளை முன்வைக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

மக்கள் முறைப்பாடுகளை முன்வைக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

மக்கள் முறைப்பாடுகளை முன்வைக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

27 Mar, 2020 | 3:57 pm

Colombo (News 1st) மக்களின் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவை 24 மணித்தியாலங்களும் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு, ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் வழங்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாதிருத்தல் அல்லது மக்கள் அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில் செயற்படுகின்றமை உள்ளிட்ட முறைப்பாடுகளை இங்கு பதிவு செய்ய முடியும்.

011-2354550 அல்லது 011-2354655 என்ற இலக்கங்களின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, அலுவலகத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான ‪011-2354354‬ மற்றும் 3872/ 3873/ 3874/ 3875 ஆகிய தொடர் இலக்கங்களின் ஊடாக தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மக்கள் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் கபில குணசிங்கவின் 077-3743718 என்ற யைடக்க தொலைபேசி இலக்கத்திற்கும் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

மக்களால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை, குறித்த பிரிவுகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவை குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக சில தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

0112860003 அல்லது 0112860004 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை வழங்க முடியும்.

0112354354‬ என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு 3355 என்ற தொடர் இலக்கத்தின் ஊடாகவும் இந்த தகவல்களை தெரிவிக்க முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்