அரசாங்க செலவுகளுக்கு போதுமான நிதி கையிருப்பிலுள்ளதாக திறைசேரி தெரிவிப்பு

அரசாங்க செலவுகளுக்கு போதுமான நிதி கையிருப்பிலுள்ளதாக திறைசேரி தெரிவிப்பு

அரசாங்க செலவுகளுக்கு போதுமான நிதி கையிருப்பிலுள்ளதாக திறைசேரி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Mar, 2020 | 12:03 pm

நாட்டின் தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தின் செலவுகளுக்கு போதுமான நிதி கையிருப்பிலுள்ளதாக திறைசேரி தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு , சுகாதார சேவை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான நிதியை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல கூறியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை மக்களின் வீடுகளுக்கு சென்று விநியோகிப்பதற்கும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், அரச ஊழியர் ஓய்வூதிய கொடுப்பனவை ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்