தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 503 பேர் வீடு திரும்பினர்

தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 503 பேர் வீடு திரும்பினர்

தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 503 பேர் வீடு திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

27 Mar, 2020 | 3:22 pm

Colombo (News 1st) வௌிநாடுகளில் இருந்து வருகை தந்த பின்னர் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்ட சிலர் இன்று அங்கிருந்து வௌியேறினர்.

இன்றைய தினம் 503 பேர் வீடு திரும்பியதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியாவிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்களே தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும், ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினமும் (26) தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து 223 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்