by Staff Writer 27-03-2020 | 4:26 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
நாட்டில் பாரிய சுகாதார சவால் நிலவுவதாலேயே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு அனுப்புவதற்கான செயற்பாடுகளில் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணி செயற்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலத்தில் வௌியே செல்ல வேண்டாம் என அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
அனுமதி வழங்கப்பட்ட வாகனங்கள் மாத்திரமே இந்த காலப்பகுதியில் பயணிக்க முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே, பொலிஸாரும் முப்படையினரும் ஊரடங்கு சட்ட விதிமுறைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.