வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் விசேட சந்தைகள் மூலம் மரக்கறிகள் விற்பனை

by Staff Writer 26-03-2020 | 7:44 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் விசேட சந்தைகள் நடத்தப்பட்டு இன்று மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. யாழ். மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலன் கருதி மரக்கறிகளை விற்பனை செய்வதற்காக சந்தைகள் நடத்தப்படுகின்றன. வலிகாமம் தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்தம் இந்த சந்தைகள் கூடும் என வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் கூறினார்.