by Bella Dalima 26-03-2020 | 4:59 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் குணமடைந்துள்ளனர்.
குணமடைந்த நால்வரும் வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளதாக IDH வைத்தியசாலையின் பணிப்பாளர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று சந்தேகத்தில் 237 பேர் மருத்துவக் கண்காணிப்பிலுள்ளனர்.