ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

by Staff Writer 26-03-2020 | 10:06 AM
Colombo (News 1st) கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 16 மாவட்டங்களில் தற்போது தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று (26 வியாழன்) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (மார்ச் 27 வெள்ளிக்கிழமை) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு நாளைய தினமே (மார்ச் 27 வெள்ளிக் கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மார்ச் 30 ஆம் திகதி திங்கள் 6.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப் பகுதியில் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீடுகளில் இருந்தே கொள்வனவு செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.