யாழில் ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிப்பு

யாழ்ப்பாணத்திற்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிப்பு

by Staff Writer 26-03-2020 | 11:13 AM
Colombo (News 1st) யாழ். மாவட்டத்தில் தற்போது அமுலில் உள்ள  ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை(27) காலை 6 மணிக்கு தளர்தப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக தற்போது ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு வட மாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை நீடித்ததாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தவாறு நாளை(27) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு பிறப்கல் 2  மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.