கண்காணிப்பு நிலையங்களிலிருந்து மூன்றாவது குழு வௌியேறியது

கண்காணிப்பு நிலையங்களிலிருந்து மூன்றாவது குழு வௌியேறியது

கண்காணிப்பு நிலையங்களிலிருந்து மூன்றாவது குழு வௌியேறியது

எழுத்தாளர் Staff Writer

26 Mar, 2020 | 3:03 pm

Colombo (News 1st) தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து 223 பேர் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு தனிமைப்படுத்தும் நிலையத்திலிருந்து 42 பேரும் தியத்தலாவையிலிருந்து 38 பேரும் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு – புனானையிலிருந்து 125 பேரும் மியன்குளத்திலிருந்து 18 பேரும் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவர்களின் வதிவிடங்களை அண்மித்துள்ள நகரங்கள் வரை அவர்களை அழைத்துச்செல்லவுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 7,500 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கு அமைய இவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்