இந்தியாவில் 664 பேருக்கு கொரோனா தொற்று: 12 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் 664 பேருக்கு கொரோனா தொற்று: 12 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் 664 பேருக்கு கொரோனா தொற்று: 12 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

26 Mar, 2020 | 3:46 pm

Colombo (News 1st ) இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 664 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நாடு தழுவிய முடக்கல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.

இந்த நிலையில், டெல்லியில் வைத்தியரொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் மாத்திரமன்றி அவருடைய மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வைத்தியரின் சிகிச்சை நிலையத்திற்கு இம்மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை சென்றவர்களையும், வைத்தியருடன் தொடர்பு வைத்திருந்தவர்களையும் தனிமைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்