அதி அபாய வலயங்களில் பொதுமக்களின் வங்கித் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை

அதி அபாய வலயங்களில் பொதுமக்களின் வங்கித் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை

அதி அபாய வலயங்களில் பொதுமக்களின் வங்கித் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை

எழுத்தாளர் Staff Writer

26 Mar, 2020 | 3:25 pm

Colombo (News 1st) அதி அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வங்கிகள் திறக்கப்பட்டாலும் , வழமை போல் கொடுக்கல், வாங்கல்களை முன்னெடுக்க சந்தர்ப்பம் வழங்க முடியாதுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வங்கி கிளைகளில் உள்ளக மற்றும் வர்த்தக செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

அதி அபாய வலயங்களில் பொதுமக்களின் நாளாந்த வங்கித் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை காணப்படுதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் இன்று நண்பகல் 12 மணி வரை வங்கி செயற்பாடுகளில் ஈடுபட பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்