கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

by Staff Writer 25-03-2020 | 5:53 PM
Colombo (News 1st) கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டிற்குள் தொற்று மூன்று கட்டங்களாகப் பரவும் அபாயமுள்ளதாகவும் தற்போது சிறு குழுவொன்றினூடாக பரவும் நிலை காணப்படுவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. கிராமங்கள் மற்றும் வீட்டிற்குள்ளேயே வைரஸ் பரவும் நிலை ஏற்பட்டால், பாரதூரமான நிலைமை ஏற்படலாம் என வைத்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்தால் ஒட்டுமொத்த சுகாதார சேவையும் வீழ்ச்சியடையும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மரணங்கள் ஏற்படுவதற்கான அபாயமுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.