சலுகைக் காலம் வழங்குமாறு IMFஇடம் ஜனாதிபதி கோரிக்கை

கடனை திருப்பி செலுத்த சலுகைக் காலம் வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் ஜனாதிபதி கோரிக்கை

by Staff Writer 25-03-2020 | 6:32 PM
Colombo (News 1st) COVID - 19 அச்சுறுத்தல் காரணமாக கடனை திருப்பி செலுத்த சலுகைக் காலத்தை வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டில், சர்வதேச நிதி சபையிடம் பெறப்பட்ட கடனை மீள செலுத்துவதற்கு சலுகைக் காலம் அல்லது கடனை திருப்பி செலுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்தி வைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். நீண்ட கால மற்றும் இருதரப்பு நன்கொடை பிரதிநிதிகளிடம் இந்த கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் ஜனாதிபதி கோரியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டிற்கு இவ்வாறான சலுகைகள் பாரிய அளவில் உதவியாக அமையும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாகவும் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.