பொதுமக்களுக்காக கொண்டு செல்லப்பட்ட முட்டை வர்த்தகர்களுக்கு விநியோகம்

by Staff Writer 25-03-2020 | 8:32 PM
Colombo (News 1st) முள்ளிப்பொத்தானையைச் சேர்ந்த இரண்டு வர்த்தகர்கள் லொறியொன்றில் முட்டைகளை ஏற்றிக்கொண்டு கந்தளாய் நகருக்கு இன்று முற்பகல் சென்றிருந்தனர். குறித்த முட்டை லொறி இன்று காலை பொலிஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு சில வர்த்தகர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். பிரதேசவாசிகளின் எதிர்ப்பை அடுத்து வீதிக்கு அருகே லொறி நிறுத்தப்பட்டு முட்டை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பிரதேசவாசி ஒருவர் தெரிவித்ததாவது,
கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகே முட்டை மானிய விலையில் விற்கப்படுவதாக தகவல் கிடைத்து நான் அங்கு சென்றேன். செல்வதற்கு முன்னதாகவே பொலிஸார் தேவையான முட்டைகளை எடுத்து விட்டனர். வர்த்தகர்களுக்கு பெட்டிக் கணக்கில் முட்டைகளைக் கொடுத்துள்ளனர். அவர்கள் மறுநாள் அதிக விலைக்கு விற்பார்கள். அது அநீதியானது. பண வசதி உள்ளவர்கள் பெட்டிக் கணக்கில் முட்டைகளை கொள்வனவு செய்யலாம். வறிய மக்களுக்கு 10 , 20 முட்டைகளையே வழங்குகின்றனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணிளை முடித்துக்கொண்ட பின்னரே பொதுமக்களுக்காக வாகனத்தை அனுப்பி வைத்தனர். மீண்டும் பொலிஸார் வாகனத்தை உள்ளே எடுத்தனர். எமக்கு வாங்குவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை
முட்டைகளை கொள்வனவு செய்வதற்கு வந்தவர்கள் நீண்ட வரிசையில் நிற்பதையும் காண முடிந்தது.