சுற்றுலாப் பயணிகளுக்கான ETA உள்ளிட்ட விசா வசதிகள் 31 ஆம் திகதி வரை இடைநிறுத்தம்

சுற்றுலாப் பயணிகளுக்கான ETA உள்ளிட்ட விசா வசதிகள் 31 ஆம் திகதி வரை இடைநிறுத்தம்

சுற்றுலாப் பயணிகளுக்கான ETA உள்ளிட்ட விசா வசதிகள் 31 ஆம் திகதி வரை இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2020 | 2:31 pm

Colombo (News 1st) நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் ETA (Electronic Travel Authorization – eTA) உள்ளிட்ட விசா வசதிகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு வரை விசா வசதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பணிப்பாளர் கயன் மிலந்த தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டிற்கு பயணிகள் வருவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு வரை இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனினும், நாட்டிலிருந்து விமானங்கள் பயணிப்பதில் எவ்வித இடையூறுகளும் இல்லை என சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்