by Bella Dalima 25-03-2020 | 3:24 PM
Colombo (News 1st) புதிதாக உறுதிப்படுத்தப்படும் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சீனா இன்று அறிவித்துள்ளது.
உள்நாட்டில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படாத நிலையில், வௌிநாட்டிலிருந்து வருபவர்களிடையே ஏற்படும் தொற்றும் குறைவடைந்து செல்வதாக சீனா அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸினால் பாரிய பாதிப்பை எதிர்கொண்ட ஹூபெய் மாகாணம் உட்பட சீனா முழுவதிலும் இதே நிலையே காணப்படுகின்றது.