கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலியா புதிய கட்டுப்பாடுகளை விதித்தது

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலியா புதிய கட்டுப்பாடுகளை விதித்தது

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலியா புதிய கட்டுப்பாடுகளை விதித்தது

எழுத்தாளர் Bella Dalima

25 Mar, 2020 | 3:10 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகளின் கீழ் திருமணமொன்றில் 5 பேரும், மரண சடங்கொன்றில் 10 பேரும் மாத்திரம் கலந்துகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கிடையிலான சமூகத் தொடர்புகளை இயலுமானவரை குறைக்கும் நோக்குடன், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் கீழ் வெளிநாட்டுப் பயணங்கள் தடை செய்யப்படுவதுடன், பொது இடங்கள் பலவும் மூடப்படுகின்றன.

அவுஸ்திரேலியாவில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பைத் தொடர்ந்து, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அந்நாட்டு நேரப்படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்