கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் குணமடைந்தார்: 102 பேருக்கு தொற்று

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் குணமடைந்தார்: 102 பேருக்கு தொற்று

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் குணமடைந்தார்: 102 பேருக்கு தொற்று

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2020 | 2:19 pm

Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மற்றுமொருவர் குணமடைந்துள்ளார்.

IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே குணமடைந்துள்ளார்.

அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மூன்றாவது நபர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்று (24) மாலை குறித்த பெண் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வௌியேறியதாக தேசிய தொற்றுநோயியல் பிரிவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 102 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களில் 99 பேர் வைத்தியசாலைகளில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான சந்தேகத்தில் 225 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிலுள்ளனர்.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான சந்தேகத்தில் 08 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் பணிப்பாளர் டொக்டர் T. சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று காரணமாக வட மாகாணம் வேறு மாகாணங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆளுநர் P.S.M.சார்ள்ஸ் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்