கொரோனா கண்காணிப்பு நிலையங்களில் இருந்து இரண்டாவது குழுவினர் வௌியேற்றம்

கொரோனா கண்காணிப்பு நிலையங்களில் இருந்து இரண்டாவது குழுவினர் வௌியேற்றம்

கொரோனா கண்காணிப்பு நிலையங்களில் இருந்து இரண்டாவது குழுவினர் வௌியேற்றம்

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2020 | 2:46 pm

Colombo (News 1st) வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பின்னர் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒரு குழுவினர் இன்று தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

201 நபர்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு – புனானை கண்காணிப்பு நிலையத்திலிருந்து 57 பேரும் கந்தக்காடு நிலையத்திலிருந்து 144 பேரும் கண்காணிப்பின் பின்னர் இன்று அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்களின் சொந்த இடங்களுக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளதாக பாதுகாப்புப் படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பின்னர் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முதலாவது குழுவினர் நேற்று (24) அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

311 பேர் இவ்வாறு கண்காணிப்பின் பின்னர் அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்