உள்ளூர் கடற்றொழிலாளர்களிடமிருந்து மீன்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

உள்ளூர் கடற்றொழிலாளர்களிடமிருந்து மீன்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

உள்ளூர் கடற்றொழிலாளர்களிடமிருந்து மீன்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2020 | 5:16 pm

Colombo (News 1st) உள்ளூர் கடற்றொழிலாளர்களிடமிருந்து மீன்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், கடற்றொழிலாளர்கள் தமது கடலுணவுகளை சந்தைப்படுத்துவதில் எதிர்நோக்கியுள்ள இடர்பாடுகளைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

இதற்கமைய, தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளூரில் பிடிக்கப்படுகின்ற கடலுணவுகளை கடற்றொழில் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைக்கு அமைய, 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்