இளவரசர் சார்ள்ஸிற்கு கொரோனா வைரஸ் தொற்று

இளவரசர் சார்ள்ஸிற்கு கொரோனா வைரஸ் தொற்று

இளவரசர் சார்ள்ஸிற்கு கொரோனா வைரஸ் தொற்று

எழுத்தாளர் Bella Dalima

25 Mar, 2020 | 4:38 pm

Colombo (News 1st) வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இலேசான நோய் அறிகுறிகளுடன் அவர் வீட்டிலிருந்து பணிகளைத் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தில் உள்ள அவர்களது இல்லத்தில் இளவரசர் சார்ள்ஸூம் இளவரசி கமிலாவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இளவரசி கமிலாவிற்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதுடன், அவருக்கு கொரோனா தொற்று இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

71 வயதான இளவரசர் சார்ள்ஸ் கடந்த வாரத்தில் பொதுப்பணிகள் காரணமாக பலரை சந்தித்திருந்ததால், யார் மூலம் அவருக்கு தொற்று ஏற்பட்டது என அறிய முடியவில்லை என கிளாரன்ஸ் இல்லம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்