ஊரடங்கின் போது மருந்தகங்கள் திறந்திருக்கும்

ஊரடங்கு சட்டத்தின் போது மருந்தகங்கள் திறந்திருக்கும்

by Staff Writer 24-03-2020 | 5:35 PM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் வைத்தியசாலைகளிலும் மருந்தகங்களிலும் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் பெருந்திரளான நோயாளர்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு, அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி அறிவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நோயாளர்களின் பதிவேடு மற்றும் மருந்துகளுக்கான பற்றுச்சீட்டுகளை , ஊரடங்கின் போது பயன்படுத்தக்கூடிய அனுமதிப்பத்திரங்களாக கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல், மருந்தகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஔடதங்களை கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.