by Bella Dalima 24-03-2020 | 3:55 PM
Colombo (News 1st) அந்நாட்டின் மிகப்பெரிய நகராகிய யங்கூன் மற்றும் மேல் மாகாணமான சின்-இல் இந்த நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் ஐக்கிய இராச்சியத்திற்கு பயணித்திருந்த 26 மற்றும் 36 வயதுடைய இருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மியன்மார் சுகாதார அமைச்சு அறிக்கையொன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளது.
சீனாவுடன் நீண்ட எல்லையைக் கொண்ட மியன்மாரில் இதுவரை கொரோனா தொற்றுடைய நோயாளிகள் எவரும் அடையாளங்காணப்பட்டிருக்கவில்லை.