ஓராண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் போட்டிகள்

ஓராண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் போட்டிகள்

ஓராண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் போட்டிகள்

எழுத்தாளர் Bella Dalima

24 Mar, 2020 | 4:31 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸ் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரான டிக் பௌண்ட் கூறியுள்ளார்.

பிரிட்டன் ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் டோக்கியோவிற்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்ப விரும்பவில்லை என தெரிவித்ததும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமைப்பினர் இவ்வாறு அறிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவும் கனடாவும் ஏற்கனவே ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள முடியாது என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான்கு வாரங்களுக்குள் ஒலிம்பிக் போட்டிகள் குறித்து அடுத்த முடிவு எடுக்கப்பட வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் குழு நிர்ணயித்துள்ளது. ஆனால், விரைவிலேயே இது குறித்து அடுத்த அறிவிப்பு வெளிவரும் என டிக் பௌண்ட் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்