மீண்டும் ஊரடங்கு நீடிப்பு -  புதிய தகவல்கள்

மீண்டும் ஊரடங்கு நீடிப்பு - புதிய தகவல்கள்

by Staff Writer 23-03-2020 | 12:40 PM
*இன்று (23ஆம் திகதி) ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணி முதல் மீண்டும் ஊரடங்கு... - அந்த ஊரடங்கு 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை ஆறு மணி வரை அமுலில்... - அந்த இடங்களில் 26ஆம் திகதி வியாழக்கிழமை பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்கு... *கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தில் நாளை (24ஆம் திகதி) காலை ஆறு மணிக்கு ஊரடங்கு நீக்கப்படும்... - அந்த எட்டு மாவட்டங்களிலும் நாளை (24ஆம் திகதி) பகல் 12 மணியிலிருந்து 27ஆம் திகதி வௌ்ளிக்கிழமை காலை ஆறு மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில்... - அந்த மாவட்டங்களில்  27ஆம் திகதி நண்பகல் 12 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம்... இதேவேளை, மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நாடளாவிய ரீதியில் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சுற்றுலாப் பயணிகளை ஆங்காங்கே அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற காலப்பகுதியில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாய செய்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. விவசாய மற்றும் வர்த்தக துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் இந்த விடயங்களை முறையாக நிருவகிக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.