ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளில் இருந்து கனடா விலகல்

ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளில் இருந்து கனடா விலகல்

ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளில் இருந்து கனடா விலகல்

எழுத்தாளர் Bella Dalima

23 Mar, 2020 | 3:44 pm

Colombo (News 1st) ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக கனடா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் வீரியத்திலிருந்து பாதுகாப்பு பெறும் நோக்குடன் இந்த தீர்மானத்தை எடுத்ததாக கனடா அறிவித்துள்ளது.

இதேவேளை, ஒலிம்பிக் விழாவை நடத்துவது தொடர்பில் தீர்மானிப்பதற்கு ஜப்பானுக்கு நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (22) நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவரான தோமஸ் பேர்க் கூறியுள்ளார்.

COVID-19 தொற்றை கருத்திற்கொண்டு சர்வதேச மெய்வல்லுநர் வீரர்கள் , அரச தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஒலிம்பிக் விழாவை பிற்போடுமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்