மின் கட்டணத்தை செலுத்த சலுகைக் காலம் அறிவிப்பு

மின் கட்டணத்தை செலுத்த சலுகைக் காலம் அறிவிப்பு

by Staff Writer 22-03-2020 | 3:39 PM
Colombo (News 1st) மின் கட்டணத்தை செலுத்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார பட்டியலுக்கான கட்டணத்தை செலுத்த மக்கள் பாரிய அளவில் ஒன்றுகூடுகின்றமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். ஒன்லைன் ஊடாக வழமைபோல மின்சார பட்டியலுக்கான கட்டணங்களை செலுத்த முடியும் எனவும் அவர் கூறினார். இந்த காலப்பகுதியில் மின் விநியோகத் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டாம் என அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.