அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்குமாறு ஆலோசனை

அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஆலோசனை

by Staff Writer 22-03-2020 | 2:58 PM
Colombo (News 1st) உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார். பிரதமரின் செயலாளர் காமினி செனவிரத்னவிற்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிப்புரைக்கு அமைய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. தட்டுப்பாடின்றி உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் செயற்பாடுகள் நேற்று முதல் சதொச தலைமை களஞ்சியசாலையிலிருந்து முன்னெடுக்கப்படுவதாக பிரதமரின் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தேவையான அளவு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கவும் கையிருப்பு காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.