ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் உரிமையாளர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழப்பு

ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் உரிமையாளர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழப்பு

ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் உரிமையாளர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

22 Mar, 2020 | 5:22 pm

Colombo (News 1st) ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் (Real Madrid ) கால்பந்து அணியின் முன்னாள் உரிமையாளர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது.

ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து அணியான ரியல் மாட்டிரிட் அணியின் முன்னாள் உரிமையாளர் லொரென்சோ சான்ஸ் (Lorenzo Sanz) கடந்த செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவால் மருத்துவதுமனையில் சேர்க்கப்பட்டார்.

76 வயதான அவர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி நேற்று (21) உயிரிழந்துள்ளதாக தற்போது ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

லொரென்சோ சான்ஸ் 1995 முதல் 2000 வரை ரியல் மாட்ரிட் அணியின் உரிமையாளராக இருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்