நடிகர் விசு காலமானார்

நடிகர் விசு காலமானார்

நடிகர் விசு காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

22 Mar, 2020 | 7:25 pm

தமிழ் திரைப்பட நடிகர் விசு (75) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

இவர் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர் எனும் பன்முகங்களைக் கொண்டவர்.

1941 ஆம் ஆண்டு பிறந்த இவர், திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றிலும் நடித்துள்ளார்.

நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார்.

இவர் இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்