தமிழகத்தில் சுய ஊரடங்கு சட்டம் நாளை காலை 5 மணி வரை நீடிப்பு

தமிழகத்தில் சுய ஊரடங்கு சட்டம் நாளை காலை 5 மணி வரை நீடிப்பு

தமிழகத்தில் சுய ஊரடங்கு சட்டம் நாளை காலை 5 மணி வரை நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

22 Mar, 2020 | 5:00 pm

Colombo (News 1st) தமிழகத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வரும் சுய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் இதுவரை 341 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் இன்று மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் சுய ஊரடங்கை பின்பற்றி வருகின்றனர்.

நாடு முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சுய ஊரடங்கு இரவு 9 மணிக்கு முடிவடைய உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று இரவு 9 மணிக்கு நிறைவடைய இருந்த சுய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மக்கள் நலன் கருதி அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு தரும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்