இந்தியாவிற்கு யாத்திரை சென்றிருந்த அனைவரும் நாடு திரும்பினர்

இந்தியாவிற்கு யாத்திரை சென்றிருந்த அனைவரும் நாடு திரும்பினர்

இந்தியாவிற்கு யாத்திரை சென்றிருந்த அனைவரும் நாடு திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2020 | 3:31 pm

Colombo (News 1st) இந்தியாவிற்கு யாத்திரை மேற்கொண்டிருந்த அனைவரும் நாடு திரும்பியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க தடை விதிக்கப்பட்ட போது, 1500 பேர் இந்தியாவில் இருந்ததாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.

எனினும், தற்போது இவர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு திரும்பிய யாத்திரிகர்கள் அனைவரும் தனிமைப்படுத்தி, கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்