by Bella Dalima 21-03-2020 | 4:31 PM
Colombo (News 1st) சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் 2 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுநோயால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், 2,77,310 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 91,994 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த 75 வயதுள்ள பெண் அண்மையில் இதய பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தொடர் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
இந்தோனேசியாவை சேர்ந்த 64 வயது முதியவர் நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், கிருமித் தொற்று காரணமாக தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார்.