by Staff Writer 21-03-2020 | 3:51 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று தொடர்பில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அர்ப்பணிப்பை கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை பாராட்டியுள்ளார்.
சில தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் நோய்த்தொற்றுக்குள்ளானோரை கவனித்துக்கொள்ளும் விதம் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் பேராயர் கூறியுள்ளார்.
தங்களின் அசௌகரியங்களை கருத்திற்கொள்ளாது பாதுகாப்பு தரப்பினர் செயற்படுவதாகவும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்
இதேவேளை, நாட்டின் நிலை உணர்ந்து பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என மல்வத்து பீடத்தின் அனுநாயக்க திம்புல் கும்புரே விமல தம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் பிரகாரம் செயற்படாவிடின், இந்த தொற்று முழு நாட்டிற்கும் பரவக்கூடும் என அவர் கூறியுள்ளார்.
ஆகவே, வீட்டைவிட்டு வௌியேறாது, சுய தனிமையில் ஈடுபடுமாறு அனுநாயக்க தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு இந்து குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி வைதீஸ்வர குருக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.