பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 61 பேர் கைது

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 61 பேர் கைது

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 61 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2020 | 3:02 pm

Colombo (News 1st) பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரவளையில் 8 பேரும் ஹப்புத்தளை, தங்காலை, தவுலகல மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் வீதமும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் ஹட்டன் பகுதியில் 7 பேரும் கட்டுநாயக்க பகுதியில் 2 பேரும் சிலாபத்தில் 3 பேரும் கேகாலையில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லதண்ணி பகுதியில் 2 பேரும் தம்புள்ளையில் 9 பேரும் வலஸ்முல்ல பகுதியில் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊரடங்கு சட்டம் அடுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்