நுகர்வோர் வர்த்தக நிலையங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்குமாறு ஆலோசனை

நுகர்வோர் வர்த்தக நிலையங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்குமாறு ஆலோசனை

நுகர்வோர் வர்த்தக நிலையங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்குமாறு ஆலோசனை

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2020 | 5:22 pm

Colombo (News 1st) ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டவுடன் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் நுகர்வோர் வர்த்தக நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுமாயின், உடனடியாக பிரதேச கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரை தொடர்புகொள்ளுமாறு கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் சுவிந்த எஸ்.சிங்கபுலி அறிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்கள் தேவையான அளவு கையிருப்பில் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டவுடன் அத்தியாவசிய பொருட்களுக்கான விநியோகத்தை ஆரம்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்