கொரோனா தொற்று: இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்று: இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்று: இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

21 Mar, 2020 | 4:14 pm

Colombo (News 1st) இத்தாலியில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா வைரஸிற்கு நேற்று (20) அதிக அளவாக 627 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா உட்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி, மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸிற்கு சீனாவை விட இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இத்தாலியில் இதுவரை இல்லாத வகையில், நேற்று மாத்திரம் கொரோனாவிற்கு 627 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4032 ஆக உயர்ந்துள்ளது.

47,021 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மாத்திரம் 5986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்