கொக்கரல்லயில் விபத்து: மருந்துப் பொருட்களுடன் சென்ற அம்பியுலன்ஸ் சாரதி பலி

கொக்கரல்லயில் விபத்து: மருந்துப் பொருட்களுடன் சென்ற அம்பியுலன்ஸ் சாரதி பலி

கொக்கரல்லயில் விபத்து: மருந்துப் பொருட்களுடன் சென்ற அம்பியுலன்ஸ் சாரதி பலி

எழுத்தாளர் Bella Dalima

21 Mar, 2020 | 5:54 pm

Colombo (News 1st) பொலன்னறுவை ஆதார வைத்தியசாலை நோக்கி பயணித்த அம்பியுலன்ஸ் வாகனம் விபத்திற்குள்ளானதில், அம்பியுலன்ஸ் சாரதி உயிரிழந்துள்ளார்.

கொக்கரல்ல பகுதியில் வீதியிலிருந்து விலகிய அம்பியுலன்ஸ், நடைபாதை தடைக்கல்லில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த அம்பியுலன்ஸ் உதவியாளர் பொல்கொல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களுக்கு மருந்துப் பொருட்களையும் பாதுகாப்பு ஆடைகளையும் கொழும்பிலிருந்து கொண்டு சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சாரதி தொடம்கஸ்லந்த பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்