பரிவர்த்தனை நடவடிக்கைகள் 5 ஆவது நாளாக இடைநிறுத்தம்

கொழும்பு பங்குச்சந்தையில் பரிவர்த்தனை நடவடிக்கைகள் ஐந்தாவது நாளாக இடைநிறுத்தம்

by Staff Writer 20-03-2020 | 3:33 PM
Colombo (News 1st) கொழும்பு பங்குச்சந்தையில் பரிவர்த்தனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு சில நிமிடங்களில் இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது. இன்றுடன் ஐந்தாவது நாளாகவும் பரிவர்தனை செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது. இன்றைய கொடுக்கல் வாங்கலுக்கான S&P SL 20 சுட்டெண் 5.33 வீதத்தால் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து பரிவர்தனை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ASPI சுட்டெண் 2.61 வீதத்தால் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.