மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்

புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு கொச்சிக்கடையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

by Staff Writer 19-03-2020 | 5:23 PM
Colombo (News 1st) புத்தளத்தின் 11 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் சிலாபத்தின் 7 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும் நீர்கொழும்பின் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலும் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், புத்தளம் பிராந்தியத்தில் ஆனமடுவ, கற்பிட்டி, கருவலகஸ்வெவ, முந்தல், நவகத்தேகம, பல்லம, வண்ணாத்திவில்லு, உடப்பு, நுரைச்சோலை மற்றும் சாலியவெவ பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சிலாபம் பொலிஸ் பிரிவின் சிலாபம், தங்கொடுவ, கொஸ்வத்த, மாதம்பை, மாரவில, வென்னப்புவ மற்றும் ஆராச்சிக்கட்டு ஆகிய பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தவிர, நீர்கொழும்பு - கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னரே பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீடுகளிலிருந்து வௌியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரொனா தொற்றை இல்லாதொழிக்கும் செயற்பாட்டிற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.